டங்ஸ்டன் ஏலம் ரத்து- தமிழக பாஜகவின் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி: வானதி சீனிவாசன்

 
‘வேல் யாத்திரை தடை பாரபட்ச செயல்’ – வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!

டங்ஸ்டன் ஏலம் ரத்து- தமிழக பாஜகவின் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

வானதி

இதுதொடர்பாக பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தளத்தில், “நமது பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள், தமிழக விவசாயிகளின் உணர்வுகளுக்கும் தமிழக பாஜக-வின் தொடர் உந்துதல்களுக்கும் மதிப்பளித்து, அவர்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுத்து, மதுரை அரிட்டாபட்டியில் அமையவிருந்த டங்ஸ்டன் கனிமவள சுரங்கத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளதை மனமார வரவேற்கிறோம். போராட்டக் களத்திற்கே சென்று மதுரை மக்களுக்கு ஆதரவளித்து, அம்மக்களுக்கு நம்பிக்கையூட்டி, அவர்களை டெல்லி வரை அழைத்து சென்று போராடிய நமது தமிழக பாஜக நிர்வாகிகளின் விடாமுயற்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி இது. மதுரை மக்களோடு களப்பணியாற்றிய அனைத்து பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். 


இன்னல்கள் அனைத்திலும் நமது விவசாய பெருமக்களின் உடன் நின்று அவர்களின் நலன் காக்கும் நமது பிரதமரின் தாயுள்ளம் அனைவராலும் போற்றத்தக்கத்து மட்டுமன்றி, வியக்கத்தக்கதும் கூட. இவ்வாறு, தமிழக மக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் பரிசீலித்து, எவ்வித சமரசமுமின்றி அதற்கு தக்க நடவடிக்கைகள் எடுக்கும் நமது பாரதப் பிரதமருக்கு மீண்டுமொருமுறை எங்களது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.