“மகளிர் மாநாட்டிலேயே மது போதையில் இளைஞர் அட்ராசிட்டி”- வானதி சீனிவாசன் காட்டம்

 
Vanathi seenivasan Vanathi seenivasan

நீங்கள் நடத்துகிற மாநாட்டிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்றால் உங்கள் பாசிச திமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்புக்கு என்ன உத்திரவாதம்..?  என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நீங்க கேள்வி கேட்க வேண்டியது ஸ்டாலினை.. கொஞ்சம் கூட மனசு உறுத்தலையா..  கனிமொழிக்கு வானதி கேள்வி | Vanathi Srinivasan slams Kanimozhi over the  death of 5 people who ...

இதுதொடர்பாக பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தளத்தில், “தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு அமல்படுத்துவோம் என்று சொல்லிக் கொண்டிருந்த கனிமொழி அவர்களே.. தமிழகப் பெண்களுக்கு நீங்கள் கூறிய மதுவிலக்கு இதுதானா? நேற்று பல்லடம் திமுக மகளிர் மாநாட்டிலேயே மது போதையில் பெண்கள் பகுதியில் இளைஞர் ஒருவர் உள்ளே புகுந்து அட்ராசிட்டி செய்திருக்கிறார். இதுதான் நீங்கள் கூறிய மதுவிலக்கா..? 

நீங்கள் நடத்துகிற மாநாட்டிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்றால் உங்கள் பாசிச திமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்புக்கு என்ன உத்திரவாதம்..? போதையில் சீரழியும் இளைஞர்கள், பாதிக்கப்படும் பெண்கள் இதுபோன்ற மாநாட்டை வேண்டுமானால் உங்கள் விடியா திமுக ஆட்சியில் நடத்தலாம்..! அதுதானே இந்த ஆட்சியின் அவல சாதனைகள்..!” என சாடியுள்ளார்.