திரிஷா குறித்து இழிவாக பேசிய மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - வானதி சீனிவாசன்
நடிகை திரிஷா குறித்து இழிவாக பேசிய மன்சூர் அலிகான் மீது காவல் துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
லியோ திரைப்படத்தில் நடிகர் த்ரிஷாவை கற்பழிப்பது போன்ற காட்சி இடம்பெறவில்லை என நடிகர் மன்சூர் அலிகான் கூறிய கருத்து பெரும் சர்சையை ஏற்படுத்தியது. இந்த கருத்துக்கு நடிகை த்ரிஷா கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். இதேபோல் லியோ திரைப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட திரைபிரபலங்கள் பலரும் மன்சூர் அலிகானின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து நடிகர் மன்சூர் அலிகான் இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்தார். அதாவது தான் கூறிய கருத்தை தவறாக சித்தரித்து சிலர் வெளியிட்டு வருவதாக கூறிய்யிருந்தார்.
நடிகை @trishtrashers குறித்து பேட்டி ஒன்றில் மன்சூர் அலிகான் அருவருக்கத்தக்க வகையில் பேசியிருக்கிறார்.
— Vanathi Srinivasan (@VanathiBJP) November 19, 2023
சுயவிளம்பரத்திற்காக இது போன்று செயல்படும் நபர்களை வன்மையாக கண்டிக்கிறேன்.
நடிகை திரிஷா குறித்து இழிவாக பேசிய மன்சூர் அலிகான் மீது காவல் துறை தகுந்த நடவடிக்கை… pic.twitter.com/kS1ANCBKKr
இந்த நிலையில், நடிகை திரிஷா குறித்து இழிவாக பேசிய மன்சூர் அலிகான் மீது காவல் துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், நடிகை த்ரிஷா குறித்து பேட்டி ஒன்றில் மன்சூர் அலிகான் அருவருக்கத்தக்க வகையில் பேசியிருக்கிறார். சுயவிளம்பரத்திற்காக இது போன்று செயல்படும் நபர்களை வன்மையாக கண்டிக்கிறேன். நடிகை திரிஷா குறித்து இழிவாக பேசிய மன்சூர் அலிகான் மீது காவல் துறை தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.