எம்எல்ஏக்கள், எம்பிக்களுக்கு மாவட்ட ஆட்சியர் முறையான அழைப்பு விடுக்கவில்லை - பாஜக எம்எல்ஏ போஜராஜன்..!

 
1

நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள உலகப் புகழ்பெற்ற அரசு தாவரவியல் பூங்காவில் 128வது மலர் கண்காட்சி தொடங்கியது. இந்த மலர் கண்காட்சியை உதகை பாஜக சட்டமன்ற உறுப்பினர் போஜராஜன் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மலர் கண்காட்சி தொடக்க விழாவில் பங்கேற்க அரசு சார்பில் எம்எல்ஏக்கள், எம்பி ஆகியோருக்கு முறையான அழைப்பிதழ் வழங்கப்படவில்லை என கூறினார்.

மலர் கண்காட்சியின் தொடக்க விழாவில் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு பங்கேற்காததது கண்டனத்துக்குரியது எனவும் தெரிவித்தார்.