'நீண்ட ஆயுளுடன் மக்கள் பணி தொடரனும்’ - திருமாவளவனுக்கு பாஜக தலைவர்கள் வாழ்த்து..
இன்று பிறந்தநாள் கொண்டாடும் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளனுக்கு பாஜக தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இன்று தனது 62வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு நேற்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் அவரது பிறந்தநாள் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. தொடர்ந்து அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
அந்தவகையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவனுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். திருமாவளவன், நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன், தனது மக்கள் பணி தொடர இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான, அண்ணன் திரு @thirumaofficial அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
— K.Annamalai (@annamalai_k) August 17, 2024
அண்ணன் திரு @thirumaofficial அவர்கள், நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன், தனது மக்கள் பணி தொடர இறைவனை வேண்டிக்…
இதேபோல், பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தனது பிறந்த நாள் வாழ்த்து செய்தியில், “விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல உடல் நலத்துடனும் நீண்ட ஆயுளுடனும் தொடர்ந்து மக்கள் பணி புரிந்திட இறைவனை வேண்டிக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.