அடுத்தவர் மனைவிக்கு முத்தம் கொடுத்த பாஜக பிரமுகர்- போலீசார் வலைவீச்சு

 
முத்தமா கேக்குற முத்தம்; கணவரின் நாக்கை கடித்து துப்பிய மனைவி-காரணம் என்ன?

ஆட்டோ டிரைவர் மனைவிக்கு முத்தம் கொடுத்த விவகாரத்தில் பாஜக பிரமுகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் பத்து காணிப்பகுதியைச் சேர்ந்தவர் அனி குட்டன், இவரது மனைவி தன்யா. இவர் பத்து காணிப்பகுதியில்  மளிகை கடை நடத்தி வருகிறார். ஆட்டோ டிரைவரான அனிககுட்டனுக்கும் தன்யாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வாடிக்கையாக இருந்து வந்தது. இந்த நிலையில் அனி குட்டன் தனது மனைவியின் கடைக்கு சென்ற பொழுது பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் மது குமார் தன்யாவுக்கு முத்தம் கொடுப்பதை கணவரான அனிகுட்டன் பார்த்துள்ளார் .

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அனிகுட்டன், இது குறித்து தன் மனைவி தன்யாவிடம் கேட்டபொழுது கணவரை தன்யா தாக்கி உள்ளார். இது சம்பந்தமாக பாஜக பிரமுகர் மது குமாரிடம்  அனி குட்டன் கேட்கவே பாஜா பிரமுகர் மதுக்குமார், அனி குட்டனனை தகாத வார்த்தைகளால் பேசி அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த இவர்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதுடன் இது சம்பந்தமாக இவர் தனது மனைவி தன்யா மற்றும் பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் மதுக்குமார் மீது ஆரறுகாணி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.  இந்த புகாரின் அடிப்படையில் பாஜா பிரமுகர் மதுக்குமார் மற்றும் தன்யா மீது ஆறுகாணி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தற்பொழுது இருவரும் தலை மறைவாக உள்ள நிலையில் அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.