மதசார்பற்ற ஹிந்து கலாச்சாரத்தை வளர்ப்போம் என்று சொல்வதில் என்ன தவறு? - நாராயனண் திருப்பதி கேள்வி

 
narayanan thirupathi narayanan thirupathi

இஸ்லாமிய தேசத்தை படைப்போம் என்று சொல்பவர்களுக்கு எதிராக மதசார்பற்ற ஹிந்து கலாச்சாரத்தை வளர்ப்போம் என்று சொல்வதில் என்ன தவறு? என பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பஜ்ரங் பலி' என்றால் வைரம் போன்ற வலிமையான உடல் கொண்டவர் என்று பொருள். ஆனால், ராணுவ வீரர்கள் எப்படி அமரன் திரைப்படத்தில் 'ஜெய் பஜ்ரங் பலி' என்று ஹிந்து மத கோஷமிடுகிறார்கள் என்று சிலர் கேட்கிறார்கள். தாய்நாட்டைக் காக்கும் வீரர்கள் "வலிமையான இராணுவம் வாழ்க" என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்? ஆனால், காஷ்மீரில் மத அடிப்படைவாத  பயங்கரவாதிகளின் கோஷங்கள் என்னவென்று தெரியுமா? *நாரா இ தக்பீர், அல்லாஹு அக்பர். காஷ்மீரில் இருக்க வேண்டுமெனில், அல்லாஹு அக்பர் என்று சொல்லுங்கள்.இங்கு நமக்கு என்ன வேண்டும்? ஷரியத் சட்டம்.இஸ்லாம் கிழக்கிலிருந்து மேற்கு வரை மட்டும். பாகிஸ்தான் வெல்க, வாழ்க. தீவிரவாதிகள் வருகிறார்கள், இந்தியா அதன் அழிவைக் காணும். வேண்டும், வேண்டும், சுதந்திரம் வேண்டும், இந்தியாவிலிருந்து சுதந்திரம் வேண்டும். காஷ்மீர் இஸ்லாமிய தேசமாகும்.

narayanan thirupathy

இந்தியாவுக்கு எதிரான இத்தகைய கோஷங்களை மத அடிப்படைவாத பயங்கரவாதிகள் எழுப்பினால், 'ஜெய் பஜ்ரங் பலி' என்றும் 'பாரத் மாதா கி ஜெய்' (பாரத அன்னை வாழ்க) என்றும் ராணுவத்தினர் உற்சாகமாக சொல்வதில் தவறில்லை. இஸ்லாமிய தேசத்தை படைப்போம் என்று சொல்பவர்களுக்கு எதிராக மதசார்பற்ற ஹிந்து கலாச்சாரத்தை வளர்ப்போம் என்று சொல்வதில் என்ன தவறு? மத அடிப்படைவாதிகளும், பிரிவினைவாதிகளும் இந்தியாவை ஆண்டு கொண்டிருப்பது நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி என்ற உண்மையை உணர்ந்து நடந்து கொள்வது அவர்களுக்கு நல்லது என குறிப்பிட்டுள்ளார்.