பாஜக பிரமுகர் கல்யாணராமனுக்கு 163 நாட்கள் சிறை

 
Kalyanaraman

அவதூறு பரப்பிய வழக்கில் பாஜக பிரமுகர் கல்யாணராமனுக்கு 163 நாட்கள் சிறை தண்டனை விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

bjp kalyanaraman

பாஜக சார்பில் கோவை மேட்டுப்பாளையத்தில் கடந்த ஜனவரி 31-ந் தேதி நடைபெற்ற ஆர்பாட்டத்தில், கலந்துகொண்ட சென்னையை சேர்த்த பாஜக செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன், இஸ்லாமியர்களின் புனிதரான நபிகள் நாயகம் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து விசிக வழக்கறிஞர் கொடுத்த புகாரின் பேரில்,  கல்யாணராமன் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

இந்நிலையில் அவதூறு பரப்பிய வழக்கில் பாஜக பிரமுகர் கல்யாணராமனுக்கு 163 நாட்கள் சிறை தண்டனை விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதேபோல் பாஜவை சேர்ந்த கல்யாணராமன் டவிட்டரில் தொடர்ச்சியாக வெவ்வேறு மதங்களை சேர்ந்த மக்களிடையே வெறுப்புணர்வு, மோதல், கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு சர்ச்சைகுரிய கருத்துகளை பதிவிட்டு வருவதாகவும் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஜாமின் கோரி ஜார்ஜ் டவுன் பெருநகர குற்றவியல் மூன்றாவது நடுவர் நீதிமன்றத்தில் கல்யாணராமன் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவரது ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.