பாஜக பிரமுகரை ஓட ஓட விரட்டி வெட்டிய கும்பல்! சென்னையில் பரபரப்பு

 
ம்

தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் ரயில் நிலையம் அருகே பாஜக பிரமுகரை நான்கு பேர் கொண்ட கும்பல் பட்டாகத்தியால் ஓட ஓட வெட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் சீனிவாச நகர், பகுதியில் வசித்து வருபவர் செந்தில் (வயது-33). இவர் பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு பீர்க்கன்கரணை மண்டல செயலாளராக உள்ளார். இந்த நிலையில் பெருங்களத்தூர் ரயில் நிலைய சுரங்கப்பாதை அருகே இருசக்கர வாகனத்தில் தனது நண்பருடன் செந்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல், செந்தில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தை வழிமறித்து பட்டா கத்தியால் ஓட ஓட வெட்டத் தொடங்கினர். அப்பொழுது அங்கு ரோந்து பணியில் இருந்த பீர்க்கன்காரணை போலீசாரை பார்த்ததும் அந்த கும்பல் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றது. அதன் பின்னர் ரத்த வெள்ளத்தில் இருந்த செந்திலை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதுகுறித்து பெருங்களத்தூர் பீர்க்கங்கரணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பரபரப்பாக இருக்கக்கூடிய பெருங்களத்தூர் ரயில் நிலைய சுரங்கப்பாதை அருகே பாஜக பிரமுகரை ஓட ஓட வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.