அதிமுக ஒன்று சேராததே தோல்விக்கு காரணம்- அண்ணாமலை

 
Annamalai

ஈரோடு இடைத்தேர்தல் காங்கிரஸின் வெற்றியை, மக்கள் தீர்ப்பை  தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறோம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Annamalai

விழுப்புரத்திற்கு கட்சி நிகழ்ச்சிக்கு வந்திருந்த பாஜக தலைவர் அண்ணாமலை இன்று கட்சியின் நிர்வாகி இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அண்ணாமலை, “ஈரோடு இடைத்தேர்தலில் மக்கள் அளித்திருக்கக்கூடிய தீர்ப்பை தலை வணங்கி ஏற்றுக் கொள்கிறேன். வெற்றி பெறக்கூடிய சூழ்நிலையில் உள்ள காங்கிரசைச் சேர்ந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு என்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இடைத்தேர்தல் எங்களுக்கான தேர்தல் அல்ல, 2024 நடைபெறும் பாராளுமன்றத் தேர்தல் எங்களுக்கான தேர்தல். சமையல் கேஸ் எரிவாயு விலை உயர்வுக்கு  உற்பத்தி இல்லாததே காரணம். 88 விழுக்காடு வெளியில் இருந்து வாங்க வேண்டி உள்ளது .ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது

அதிமுக ஒன்று சேராததே தோல்விக்கு காரணம். இடைத்தேர்தலில் வலிமையுடன் போட்டியிட வேண்டும் என பாஜக அப்போதே கூறியது. தேர்தலில் இரண்டு அணியாக இருக்கக் கூடாது ஒரே அணியில் ஒரே சிம்பளலில் நிற்க வேண்டும், வலிமையாக நிற்க வேண்டும் என்று கூறினோம். ஆளுங்கட்சி எதிர்க்க வேண்டுமென்றால் ஒரு பலமாக நிற்க வேண்டும், அதைத்தான் இந்த இடைத்தேர்தல் காட்டியுள்ளது என்று அதிமுக பிரிந்து உள்ளதை சூசகமாக கூறினார். 

ஈபிஎஸ், ஓபிஎஸ் இணைவது குறித்து கேட்ட கேள்விக்கு, இதுகுறித்து அவர்கள் இருவர் தான் முடிவு எடுக்க வேண்டும் இதில் நான் தலையிட முடியாது என அண்ணாமலை தெரிவித்தார்.