ராஜினாமா ஏன்?- எல்.முருகன் விளக்கம்

 
ச்

பாஜகவில் அடிமட்ட தொண்டா்களுடன் இணைந்து களப்பணியாற்றவே மத்திய இணையமைச்சா் பதவி ராஜினாமா என எல்.முருகன் விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், “பாஜகவில் அடிமட்ட தொண்டா்களுடன் இணைந்து களப்பணியாற்றவே மத்திய இணையமைச்சா் பதவி ராஜினாமா செய்தேன். 2029 மக்களவைத் தேர்தலையொட்டி, அடிமட்ட அளவில் பாஜக தொண்டர்களுடன் இணைந்து களப்பணியாற்ற உள்ளேன். தமிழ்நாட்டில் பாஜகவை வலுப்படுத்துவதில் முழு நேரமாக என்னை ஈடுபடுத்திக்கொள்ள விரும்புகிறேன். முதலில் தேசம், அடுத்ததாக கட்சி இறுதியாகவே எனது நலம். பிரதமா் மோடியின் தலைமையின் கீழ் பாரத மாதாவுக்கும் தமிழ்நாட்டிற்கும் சேவையாற்றியது மிகப்பொிய பாக்கியம்.

முதலில் நாடு, பிறகு கட்சி, கடைசியில் எனது நலன். கூலித் தொழிலாளியின் மகனாக பிறந்து பிரதமர் மோடியின் அமைச்சரவையில் பணியாற்றியது பெருமை. பிரதமரின் தமிழக வருகை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அமைச்சராகப் பணியாற்றிட எனக்கு வாய்ப்பளித்த பிரதமருக்கு நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.