"தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம்"- எல்.முருகன்

 
l murugan press meet l murugan press meet

தேமுதிகவுடன் கூட்டணி அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், கூட்டணி குறித்து தேசியத் தலைமை பேசி வருகிறது கூட்டணி குறித்து தேசிய தலைமை உரிய நேரத்தில் அறிவிக்கும் என மத்திய இணை அனைச்சர் எல்.முருகன் பதிலளித்தார்.


சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொடர்ந்து மத்திய இணை அமைச்சர் எல் முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “டி.என்.பி.எஸ்.சி தேர்வை கூட சரியாக நடத்த முடியாத அரசாங்கமாக திமுக அரசாங்கம் இருக்கிறது. இதை எண்ணி வெட்கி தலை குனிய வேண்டும். இளைஞர்களின் எதிர்காலத்தில் தமிழ்நாடு அரசாங்கம் விளையாடுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி குறித்த அறிவிப்பு மதுராந்தகத்தில் வெளியிடப்பட்டது. ஆனால் திமுக கூட்டணியில் யார் யார் இருக்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரியவில்லை. அவர்களுக்கு பயம் வந்துவிட்டது.

தமிழகத்திற்கு கொடுக்கவேண்டிய அத்தனை நிதியும் கொடுக்கப்பட்டுள்ளது. செலவு செய்ததற்கான சான்றிதழை தமிழ்நாடு அரசாங்கம் காட்ட வேண்டும். மத்திய அரசு செல்லக்கூடிய விதிமுறைகளை பின்பற்றக்கூடிய  அனைத்து மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கப்படுகிறது தமிழ்நாடு அரசாங்கம் விதிமுறைகளை பின்பற்றினால் நிதி கொடுக்கப்படும். திமுக அரசு பட்டியல் இன மக்களை ஓட்டு வங்கிக்காக மட்டுமே பயன்படுத்துகிறது, அவர்கள் மீது அக்கறை இல்லை” என்றார்.

தேமுதிகவுடன் கூட்டணி அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், கூட்டணி குறித்து தேசியத் தலைமை பேசி வருகிறது கூட்டணி குறித்து தேசிய தலைமை உரிய நேரத்தில் அறிவிக்கும் என்றார்.