தமிமுகத்தில் எத்தனையோ முறை தோல்வியை சந்தித்துள்ளது- எல்.முருகன்

 
l murugan

தமிழ்நாட்டில் எத்தனையோ முறை திமுக தோல்வியை சந்தித்துள்ளதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். 

L Murugan

கர்நாடகாவில் நடந்துமுடிந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக 136 இடங்களிலும், பாஜக 65 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 19 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடகாவில் 113 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி ஆட்சி அமைக்கலாம் என்ற நிலையில், தற்போது 136 இடங்களை வென்றுள்ள காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ளது.

இந்நிலையில் புதுச்சேரியில் மீனவர்களின் குறைகேட்புக் கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன், “திராவிட மண்ணில் பாஜக வர முடியாது என ஸ்டாலின் அவர் திருப்திக்காக கூறிவருகிறார். இதே தமிழ் மண்ணில் புதுச்சேரியில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம், அப்படி பார்த்தால் தமிழ்நாட்டில் திமுக எத்தனையோ முறை தோல்வியை சந்தித்துள்ளது. ஒரு தோல்வியை வைத்துகொண்டு எதையும் கூறிவிட முடியாது. 

எம்ஜிஆர் இருந்தபோது திமுக வெற்றி பெறுவது சவாலாக இருந்தது. கலைஞர் மட்டும் அவரது தொகுதியில் தொடர்ந்து வெற்ற்றி பெற்றுக்கொண்டிருந்தார். தமிழ்நாட்டில் பாஜக வளர்ச்சியடைந்துள்ளது. தமிழக பேரவையில் பாஜக எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனர். கர்நாடகாவில் பாஜகவுக்கு 2018 ஆம் ஆண்டு இருந்த வாக்கு சதவீதமே தற்போதும் உள்ளது” என்றார்.