சந்தையில் பணியாரம் சுட்ட எல்.முருகன்!
Apr 13, 2026, 22:15 IST1776098748000
சேவூர் சந்தையில் பணியாரம் சுட்டு வாக்கு சேகரித்தார் பாஜக வேட்பாளர் எல்.முருகன்.

அவிநாசி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சரும், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளருமான எல். முருகன், அவிநாசி சேவூர் பகுதியில் அமைந்துள்ள காய்கறிச் சந்தையில் இன்று தனது பிரசாரத்தை மேற்கொண்டார்.இந்தப் பிரசாரத்தின் போது, அங்குள்ள பலகாரக் கடையில் பனியாரம் சுட்டு வாக்கு சேகரித்தார்.
இந்நிகழ்வின் போது, அவிநாசி தொகுதியில் மேற்கொள்ளப்பட உள்ள வளர்ச்சித் திட்டங்கள், மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்து மக்களிடத்தில் அவர் விளக்கமளித்தார். மேலும், “அவிநாசியின் முன்னேற்றத்திற்காக தாமரைச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.



