“தம்பி விஜய் அரசியலுக்கு புதுசு... திருந்திவிடுவார்”- குஷ்பு

 
saf saf

அதிமுக யாரிடமும் சரணடைய வேண்டிய அவசியமில்லை என விஜய் பேச்சுக்கு பாஜக நிர்வாகியும் நடிகையுமான குஷ்பு பதிலடி கொடுத்துள்ளார்.

மாமல்லபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் செயல் வீரர்கள் கூட்டத்தில் உரையாற்றிய விஜய், “பாஜகவிடம் அதிமுக நேரடியாக சரண் அடைந்துவிட்டது.திமுக தீய சக்தி. த.வெ.க. மீது மக்களுக்கு நம்பிக்கை வரும் வகையில் கட்சியினர் செயல்பட வேண்டும்  என்ன சூழ்ச்சி செய்தாலும் அழுத்தம் கொடுத்தாலும் அடங்கிப் போக மாட்டேன்” என பேசியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள பாஜக நிர்வாகியும் நடிகையுமான குஷ்பு, “மேடையில் இருக்கும்போது விசில் சத்தம் கேட்டு, வீராப்பில் வார்த்தைகளை பார்த்து பேச வேண்டும். தம்பி விஜய் அரசியலுக்கு புதுசு... திருந்திவிடுவார்... அதிமுகவினர் அரசியலுக்கு நேற்று வந்தவர்கள் கிடையாது. அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, ஈபிஎஸ் என வேர் ஊன்றி இருக்கும் ஒரு கட்சி சரணடைய வேண்டிய அவசியம் இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை பிடிக்கப் போகிறது என்ற பயம் முதல்வரின் பேச்சில் இருக்கிறது” என்றார்.