“சிபிஐ விசாரணை கேட்டது விஜய் தானே.. உங்க மீது தவறு இல்லை என்றால் போய் பார்த்துட்டு வாங்க”- குஷ்பு

 
குஷ்பு குஷ்பு

கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை கேட்டது விஜய் தானே.. உங்க மீது தவறு இல்லை என்றால்  போய் பார்த்துட்டு வாங்க என பாஜக நிர்வாகி குஷ்பு கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை குஷ்பு, “திமுகவை மட்டுமே பாஜக எதிரியாக கருதுவதாக கூறியுள்ள குஷ்பு, மத்திய அரசு நினைத்திருந்தால் பராசக்தி படத்தைதான் முதலில் தடை செய்திருக்கும். சென்சார் போர்டு சான்றிதழ் பெறாமல் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டு, பின் மத்திய அரசு மீது குற்றம்சாட்டக்கூடாது. படத்தின் சான்றிதழ்கள் 
வந்தபிறகுதான் ரிலீஸ் தேதியை அறிவிக்க வேண்டும். Rules-அ Follow பண்ணிட்டா பிரச்னையே இல்ல.. ஜனநாயகனுக்கு மட்டும் அல்ல.. எல்லாத்துக்கும். நானும் எனது குழந்தையும் விஜய் ரசிகர்கள் தான். ரசிகராக படம் வராதது வருத்தம் தான். ஆனால் விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்தால் பிரச்சனைகள் வராது. ஜனநாயகன் படத்திற்கு மட்டுமில்லை எல்லா படத்திற்கும் இது பொருந்தும். 

கரூர் விவகாரத்தில் நாளை சிபிஐ விசாரணைக்கு ஆஜராகிறார். கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை கேட்டது விஜய் தானே.. உங்க மீது தவறு இல்லை என்றால்  போய் பார்த்துட்டு வாங்க” என்றார்.