ஜனநாயகனுக்கும் பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை- குஷ்பு
Jan 4, 2026, 10:36 IST1767503200555
ஜனநாயகன் திரைப்படத்திற்கு தற்பொழுது வரை சென்சார் கிடைக்காததற்கும் தியேட்டர் சரிவர கிடைக்காததற்கும் அரசியல் காரணம் உள்ளதா? என்ற கேள்விக்கு நடிகை குஷ்பு பதில் அளித்தார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை குஷ்பு, “சிபிஐ வசம் வழக்கு இருப்பதால் தவெகவை மிரட்டி NDA கூட்டணிக்குள் பாஜக கொண்டு வரும் என அமைச்சர் பேசியிருக்கிறார். விஜயின் ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்று கிடைக்காததற்கும், பாஜகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஜனநாயகன் திரைப்படத்திற்கு தற்பொழுது வரை சென்சார் கிடைக்காததற்கும் தியேட்டர் சரிவர கிடைக்காததற்கும் அரசியல் காரணம் எதுவும் இல்லை.


