“சம வேலைக்கு சம ஊதியம்” எப்போது நடைமுறைக்கு வரும் மு.க.ஸ்டாலின் அவர்களே?- ஹெச். ராஜா

 
h.raja

“சம வேலைக்கு சம ஊதியம்” எப்போது நடைமுறைக்கு வரும் Chief Minister of Tamil Nadu திரு. M. K. Stalin அவர்களே?  என பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

h.raja


இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2009 ஆண்டில் ஒருநாள் வித்தியாசத்தில் பணிநியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு இருவேறு விதமான ஊதியத்தை நிர்ணயித்து மாபெரும் அநீதி இழைத்தது அப்போது ஆட்சியில் இருந்த உங்கள் திமுக அரசு தான். அதனால் பாதிக்கப்பட்ட சுமார் 20,000 க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் அப்போதே பல போராட்டங்களை முன்னெடுத்தார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், பிள்ளையைக் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிடுவது போல கடந்த 2021-இன் சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்தால் சம வேலை சம ஊதிய முறை கொண்டு வரப்படும் என திமுக-வின் வாக்குறுதி எண் 311-இல் குறிப்பிட்டிருந்தது. 


ஆனால், அறிவாலயத்தைப் பொறுத்தவரை தேர்தல் வாக்குறுதிகள் எல்லாம் வெறும் வெற்றுக் காகிதக் குவியல் தானே? அதனால் தான் இத்தனை வருடங்கள் கழித்து இன்றும் சம ஊதியம் கோரி இடைநிலை ஆசிரியர்கள் தெருவில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கின்றனர். இப்படி பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லையென அரசுப் பள்ளி மாணவர்கள் போராட்டம், சம ஊதியம் வழங்க வேண்டுமென இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் என மொத்தத்தில் உங்கள் கையாலாகாத ஆட்சியில் தினந்தினம் போராட்டங்களிலேயே தங்களின் நாட்களைக் கழிக்கும் தமிழக மக்களின் தலைவிதி எப்போது மாறும் முதல்வரே?” எனக் குறிப்பிட்டுள்ளார்.