நாங்க நெருக்கடி கொடுத்திருந்தால் விஜய் வெளியவே வந்திருக்கவே முடியாது - ஹெச்.ராஜா

 
ச் ச்

பாஜக நெருக்கடி கொடுத்திருந்தால் விஜய் வெளியே வந்திருக்க முடியாது என பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.

Hraja vijay

ஜனநாயகன் விவகாரத்தில் மத்திய பாஜக அரசு நெருக்கடி கொடுக்கிறதா என்ற கேள்விக்கு பதில் அளித்த பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா, நாங்க நெருக்கடி கொடுக்கணும்னா செப்டம்பர் 27ஆம் தேதியே கொடுத்திருப்போம். மனிதாபிமானத்தோடு மத்திய அரசு செயல்பட்டது. பாஜக நெருக்கடி கொடுத்திருந்தால் விஜய் வெளியே வந்திருக்க முடியாது. நாங்க எப்பவுமே ஒருத்தருடைய பலவீனத்தை கையிலெடுத்து நெருக்கடி கொடுக்கிறதில்லை என்றார்.

தொடர்ந்து பேசிய ஹெச். ராஜா, “தேசத்திற்கு துரோகம் செய்வதும், மக்களை ஏமாற்றுவதும் தான் காங்கிரஸ் கட்சியினருக்கு எப்போதும் பிடிக்கும். காங்கிரஸ் தலைவர்கள் தேர்தல் வரும் போதெல்லாம் ஊழலை எதிர்க்கிறோம். பிரிவினைவாதத்தை வெறுக்கிறோம் என்பார்கள். மதசார்பின்மை என்கிற வார்த்தையை இந்துக்களை ஏமாற்ற மட்டுமே பயன்படுத்துகிறார்கள். இந்து ஒற்றுமை உருவாகிவிட்டால் இந்து மதமே காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு தான் உருவானது என்று கூட வாய் கூசாமல் பொய் பேசுவார்கள். ஹிந்தி எதிர்ப்பு திமுகவிலேயே எடுபடவில்லை, தமிழ்நாடு மக்களிடமா எடுபட போகிறது” என்றார்.