ஹிஜாப்பை கழற்றச் சொல்லி பெண் மருத்துவருக்கு மிரட்டல் - பாஜக நிர்வாகியை பிடிக்க தனிப்படை

 
tn

திருப்பூண்டியில் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார் ஜன்னத். இவர் மருத்துவமனையில் ஹிஜாப்  அணியக் கூடாது என்று பாஜக நிர்வாகி ஒருவர் அவரை மிரட்டியதாக தெரிகிறது.மத நல்லிணக்கத்திற்கு பெயர் போன நாகை மாவட்டத்தில் ஹிஜாபை கழட்ட சொல்லி பாஜக நிர்வாகி மிரட்டியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கம்யூனிஸ்ட் கட்சி , மனிதநேய மக்கள் கட்சி , மனிதநேய ஜனநாயக கட்சி,  விடுதலை சிறுத்தை கட்சி ஆகிய பிரமுகர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மத கலவரத்தை தூண்டும் வகையில் நடந்து கொண்ட பாஜக நிர்வாகியை கைது செய்ய வேண்டும் என்று கூறி சாலை மறியல் ஈடுபட்டுநிலையில் போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட செய்தனர்.

hijab

இந்த சூழலில்  ஹிஜாப் அணிந்த பெண் மருத்துவர் எதிர்ப்பு தெரிவித்த பாஜக நிர்வாகி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  அரசு பணியின்போது ஹிஜாப் ஏன் அணிய வேண்டும்? என்று கேள்வி எழுப்பியதுடன்   திருப்பூண்டி அரசு மருத்துவமனை மருத்துவரை ஹிஜாபுக்கு பதிலாக மருத்துவ சீருடை அணிய சொல்லி வாக்குவாதம் செய்த பாஜக நிர்வாகி புவனேஸ்வர ராம்  மீது கீழையூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

police

இந்நிலையில் நாகை மாவட்டம் திருப்பூண்டி அரசு மருத்துவமனையில், இஸ்லாமிய பெண் மருத்துவரை ஹிஜாப்பை கழற்றச் சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜக விருந்தோம்பல் பிரிவு மாவட்ட தலைவர் புவனேஷ்வரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. உதவி ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் 6 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.