“சுத்தமாக இருக்கும் கோயில்களை சுத்தம் செய்யும் வித்தை பாஜக-வில்தான் உள்ளது” - அமைச்சர் சேகர் பாபு பேட்டி!!

 
sekar babu

திருப்போரூர் கந்தசாமி கோயிலில் தை மாத கிருத்திகையை முன்னிட்டு ஒரு நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார் .

sekar babu

இந்நிலையில் திருப்போரூரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, சுத்தமாக இருக்கும் கோயில்களை சுத்தம் செய்யும் வித்தை பாஜகவில்தான் நடைபெற்று கொண்டிருக்கிறது; அதற்கு ஆளுநர் துணை போய் சுத்தம் செய்கிறேன் என்று புறப்பட்டுள்ளார். ஏற்கனவே கோயில்கள் அனைத்தும் தூய்மையாக பராமரிக்கப்பட்டுள்ளது  என்று தெரிவித்தார். 

Annamalai

முன்னதாக அயோத்தியில் வரும் ஜனவரி 22 அன்று, பகவான் ஶ்ரீராமரின் திருவுருவச் சிலை பிரதிஷ்டை செய்யப்படுவதை அடுத்து,  நாடு முழுவதும் உள்ள வழிபாட்டுத் தலங்களைச் சுத்தம் செய்ய பிரதமர் மோடி அறிவுறுத்திய நிலையில் ,  வரும் 22 ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு,  தமிழக பாஜக தமிழகம் முழுவதும் உள்ள கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் என 5,000 வழிபாட்டுத் தலங்களை சுத்தம் செய்யும் பணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.