"₹40 லட்சத்தை சுருட்டிய பாஜக நிர்வாகிகள்" - திருமங்கலத்தில் ஒட்டப்படுள்ள போஸ்டர்கள்

 
tn

18வது நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முதல் கட்டமாக கடந்த 19ஆம் தேதி  நடைபெற்றது.  தமிழகம் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில்  வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.   காலை 7 மணிமுதல்  6 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில்  63.20 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

voting

கள்ளக்குறிச்சி, கரூர், நாமக்கல், பெரம்பலூர், சேலம் உள்ளிட்ட தொகுதிகளில் 70 சதவீதத்திற்கும் மேல் வாக்குப்பதிவாகியுள்ளது.  குறைந்தபட்சமாக தென் சென்னையின் 57.04 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு நிறைவடைந்ததையடுத்து இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகிறது. 

tn

இந்நிலையில் மதுரை திருமங்கலத்தில் பாஜக தேர்தல் பணிக்குழு நிர்வாகிகளை கண்டித்து அக்கட்சியினரே சுவரொட்டிகளை ஒட்டியதால் பரபரப்பு  ஏற்பட்டுள்ளது. பூத் ஏஜெண்டுகளுக்கு கொடுக்கப்பட்ட நிதியில்  ₹40 லட்சத்தை சுருட்டிய பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  ₹40 லட்சத்தை கட்சி நிர்வாகிகளே சுருட்டிவிட்டதாக புகாரை முன்வைத்து, திருமங்கலம் பேருந்து நிலையம் அருகே போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ள நிலையில்  மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிச்குமார், செயலாளர் சின்னச்சாமி உள்ளிட்ட நால்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.