பாஜக நிர்வாகி சாட்டையடி- பாலியல் வழக்குகளில் தொடர்புடையவர்களுக்கு பதவி வழங்க எதிர்ப்பு

 
ச்

பாலியல் வழக்குகளில் தொடர்புடையவர்களுக்கு பாஜகவில் கட்சிப்பதவி வழங்க எதிர்ப்பு தெரிவித்து பாஜக நிர்வாகி சாட்டையால் அடித்து போராட்டத்தில் ஈடுபட்டார்.


திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை சேர்ந்த கோகுலகிருஷ்ணன் என்பவர் பாஜகவின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட ஊடக பிரிவு தலைவராக இருந்து வருகிறார். மீஞ்சூரில் அமைந்துள்ள அருள்மிகு காமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோயில் முன்பாக பாலியல் வழக்குகளில் தொடர்புடையவர்களுக்கு பாஜகவில் கட்சிப்பதவி வழங்க எதிர்ப்பு தெரிவித்து கோகுலகிருஷ்ணன் தனக்குத்தானே 6முறை சாட்டையால் அடித்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார். 

ஹவாலா வழக்கில் குற்றச்சாட்டு எழுந்த போது அதனை பொய் என நிரூபித்து பாராளுமன்றத்திற்கு வருவதாக அத்வானி அறிவித்தாரோ, அதே போல பாஜகவில் பாலியல் குற்றச்சாட்டிற்கு உள்ளானவர்கள் தங்களை நிருபித்து கொண்டு கட்சிக்குள் வர வேண்டும் எனவும் அண்ணாமலை கரத்தை வலுப்படுத்துவதற்காக இந்த போராட்டத்தை நடத்துவதாக கூறியுள்ளார். மேலும் இது கவன ஈர்ப்பு போராட்டம் எனவும், யார் மனதையும் புண்படுத்துவதற்கான போராட்டம் அல்ல எனவும் கோகுலகிருஷ்ணன் கூறியுள்ளார்.