சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை புறக்கணிக்க பாஜக முடிவு!

 
 தமிழக சட்டப்பேரவை

நாளை நடைபெற உள்ள சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஆளுநர் திருப்பி அனுப்பிய சட்ட மசோதாக்களை நிறைவேற்ற நாளை சிறப்பு சட்டமன்றம் கூடுகிறது. துணைவேந்தரை மாநில அரசே நியமனம் செய்வதற்கான பல்கலைக்கழக திருத்த மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்கவில்லை. இதன் காரணமாக ஆளுநர் மாளிகை அந்த மசோதாக்களை திருப்பி அனுப்பியது. இதேபோல் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட 10க்கும் மேற்பட்ட மசோதாக்களை ஆளுநர் மாளிகை திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நாளை சிறப்பு சட்டமன்றம் கூடுகிறது. மசோதாக்களை எந்த திருத்தமுமின்றி நிறைவேற்றும் விதமாக சிறப்பு சட்டமன்றம் நாளை கூடுகிறது.

rn ravi

இந்த நிலையில், நாளை நடைபெற உள்ள சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  ஆளுநருக்கு எதிராக உள்ளதால் சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தை புறக்கணிக்க பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டத்தில் பங்கேற்க போவது இல்லை என சட்டப்பேரவை தலைவருக்கு கடிதம் மூலம் பாஜக உறுப்பினர்கல் தெரிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.