தமிழ்நாட்டில் கதறும் பாஜக வேட்பாளர்கள் - நிலவரம் இதோ!!

 
tt

தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற்றது . இந்த தேர்தலுக்கான முடிவுகள் இன்று காலை 8:00 மணி முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன.  காலை 8 மணி முதல் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வந்த நிலையில் 8:30 மணி முதல் வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன .

bjp

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.  தமிழ்நாட்டில் பாஜக மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது என்று கூறி வந்த  அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட நிலையில் தற்போது பின்னடைவை சந்தித்துள்ளனர். தமிழக பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை கோவையில் போட்டியிட்டுள்ள நிலையில் அவரை எதிர்த்துப் போட்டிட்ட திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் முன்னிலை வகித்து வருகிறார் . அதேபோல தென் சென்னை தொகுதியில் போட்டியிட்ட தமிழிசை சௌந்தர்ராஜன் , கன்னியாகுமரியில் போட்டியிட்ட பொன் ராதாகிருஷ்ணன் , நீலகிரியில் போட்டியிட்ட எல் முருகன்,  திருநெல்வேலியில் களம் கண்ட பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன்,  மத்திய சென்னையில் போட்டியிட்ட வினோஜ்  பி செல்வம் , விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட ராதிகா சரத்குமார் , மதுரையில் போட்டியிட்ட ராம ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

tt

 அதேபோல ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்,  தேனியில் போட்டியிட்ட டிடிவி தினகரன்,  வேலூரில் போட்டியிட்ட ஏசி சண்முகம் , பெரம்பலூரில் களம் கண்ட பாரிவேந்தர் , தென்காசியில் போட்டியிட்ட ராஜ் பாண்டியன் ஆகியோரும் பின்னடைவை சந்தித்துள்ளனர். இருப்பினும் தர்மபுரியில் பாஜக கூட்டணியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.