வெற்றி பெற்றது மாதிரியான பிம்பங்களை கட்டமைக்கும் பாஜக.. மேகாலயா பத்தி பேசுங்க - முதல்வர் ஸ்டாலின்..

 
Modi

வடகிழக்கு மாநிலங்களில் கூட்டணிக் கட்சிகள் மூலம் பாஜக வெற்றி பெற்றது மாதிரியான பிம்பங்களை கட்டமைத்து வருகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

பொதுமக்களின் கேள்விகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘உங்களில் ஒருவன் பதில்கள்’தொடரில் பதிலளித்துள்ளார். அதில் , ‘வடகிழக்கு மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் குறித்து உங்களுடைய கருத்து என்ன?’ என்கிற கேள்விக்கு பதிலளித்த முதல்வர்,  “தேர்தல் வியூகங்களின் மூலமாக வெற்றி பெற்றுள்ளது பா.ஜ.க. திரிபுராவில் பா.ஜ.க. எதிர்ப்பு வாக்குகளை திப்ரா மோத்தா கட்சி பிரித்துவிட்ட காரணமாக காங்கிரஸ் - இடதுசாரிகள் அணி தோல்வியைத் தழுவி பா.ஜ.க.வை வெற்றி பெற வைத்துவிட்டார்கள்.

வெற்றி பெற்றது மாதிரியான பிம்பங்களை கட்டமைக்கும் பாஜக.. மேகாலயா பத்தி பேசுங்க - முதல்வர் ஸ்டாலின்..

 நாகாலாந்தில் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியுடன் கூட்டணி வைத்து பா.ஜ.க. வெற்றி பெற்றிருக்கிறார்கள்! கூட்டணி அமைக்காமல் இருந்திருந்தால் இந்த வெற்றி கிடைத்திருக்காது. திரிபுரா, நாகாலாந்து பற்றிப் பேசுகிறவர்கள் ஏன் மேகாலயா பற்றி பேசுவது இல்லை? அந்த மாநிலத்தில் மொத்த தொகுதிகள் 59.

59 தொகுதியிலும் போட்டியிட்ட பா.ஜ.க., இரண்டே இரண்டு இடங்களில்தான் வென்றது. பெரும்பான்மை பெற்ற தேசிய மக்கள் கட்சிக்குத் தனது ஆதரவை வழங்கியதன் மூலமாக ஆளும்கட்சியாக தன்னை மேகாலயாவில் காட்டிக் கொள்கிறது பா.ஜ.க. இந்த மாதிரியான பிம்பங்களைக் கட்டமைத்து, தாங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருவதைபோல காட்டி கொள்கிறார்கள்.  Polarisation, Social Engineering, Media Management - இந்தச் சொற்களுக்கான பொருளைப் புரிந்துகொண்டாலே, பா.ஜ.க.வின் தேர்தல் வெற்றிகளைப் புரிந்துகொள்ளலாம்.” என்று கூறினார்.