பாஜகவில் ஓரங்கட்டப்பட்டாரா அண்ணாமலை?
கோவை வடக்கு தொகுதியை தனக்கு வழங்குமாறு அண்ணாமலை வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட கோவை வடக்கு தொகுதியை தனக்கு வழங்குமாறு பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. அரவக்குறிச்சி அல்லது மொடக்குறிச்சியில் போட்டியிட அண்ணாமலை மறு தெரிவிப்பதாகவும் தெரிகிறது. நயினார் நாகேந்திரன், வானதி, பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை இணைந்து அண்ணாமலையை ஓரங்கட்டியதாக அவரது ஆதரவாளர்கள் அதிருப்தியை வெளிப்படுத்திவருகின்றனர்.
இதனிடையே தேர்தலில் அண்ணாமலை போட்டியிட வேண்டும் என்பதில் பாஜக மேலிடம் உறுதியாக உள்ளது. ஆனால் திருப்பூர் தெற்கு அல்லது மொடக்குறிச்சியில் போட்டியிட வேண்டுமென அண்ணாமலையை நிர்பந்தப்படுத்திவருவதால் அவர் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது. கோவைக்கு உட்பட்ட ஏதேனும் ஒரு சட்டமன்ற தொகுதியை ஒதுக்கினால் போட்டியிடுவது குறித்து பரிசீலிக்கிறேன் என அண்ணாமலை பியூஷ்கோயலிடம் கூறியுள்ளார்.

