"ஆதவை தவெகவில் இருந்து விலக்கினால் விஜய்க்கு நல்லது'- அர்ஜூன மூர்த்தி

 
ச்

விஜயின் அரசியல் பயணம் வளர வேண்டும் என்றால் ஆதவ் அர்ஜூனாவை தவெகவில் இருந்து விலக்கி வைக்க வேண்டும் என தவெக தலைவர் விஜய்க்கு பாஜக நிர்வாகி அர்ஜுன மூர்த்தி அறிவுறுத்தியுள்ளார்.

Aadhav Arjuna is TVK gen secy | Chennai News - The Times of India

இதுதொடர்பாக பாஜக நிர்வாகி அர்ஜுன மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், “விஜய், தங்களின் அரசியல் தொடக்கம் தமிழகம் முழுவதும் ஒரு ஆர்வமும் எதிர்பார்ப்பும் ஏற்படுத்திய ஒன்று என்பது மறுக்க முடியாத உண்மை. அரசியலில் புதிய குரல்கள் எழுவது ஜனநாயகத்திற்கு நல்லதே. ஆனால் அந்த ஆரம்ப உற்சாகம் அரசியல் புரிதல், அனுபவம் மற்றும் பொறுப்புணர்வு ஆகியவற்றுடன் இணைந்திருக்க வேண்டும் என்பதும் அவசியமான உண்மை. தங்களின் கட்சி நிர்வாகிகள் சிலர், குறிப்பாக ஆதவ் அர்ஜுனா போன்றவர்கள், அரசியல் நாகரிகம் இல்லாத கருத்துக்களால் தேவையற்ற மோதல்களையும் மரியாதை குறைபாடுகளையும் உருவாக்கி வருகின்றனர். "நுணலும் தன் வாயால் கெடும்" என்ற பழமொழி போல, தங்களுக்கே ஏற்படும் மரியாதையையும் பேச்சுகள் பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது.


ஒரு அரசியல் இயக்கம் வளர வேண்டுமெனில் அது அறிவு, அனுபவம் மற்றும் பணிவு ஆகியவற்றின் அடிப்படையில் கட்டப்பட வேண்டும். அரைகுறை அரசியல் புரிதலுடன் பேசும் நபர்களை கட்சி நிர்வாகத்தில் வைத்துக் கொள்வது எந்த தலைவருக்கும் பலமாக இருக்காது; அது காலப்போக்கில் பெரிய அரசியல் சுமையாக மாறும். அதற்கான ஒரு எடுத்துக்காட்டு என்றால், அவரது செயல்பாடுகள் காரணமாக திருமாவளவனின் கட்சி இருந்த கூட்டணியில் ஏற்பட்ட பின்னடைவு. அந்த அரசியல் சூழ்நிலையே பின்னர் அவரை தங்கள் கட்சியில் சேரும் நிலைக்கு தள்ளியது என்பதை தமிழகம் முழுவதும் அறிந்ததே. குறிப்பாக, தமிழ் மக்களின் மனதில் மிகுந்த மரியாதையும் பாசமும் பெற்றிருக்கும் நம் அன்புத் தலைவர் ரஜினிகாந்தை குறைத்து பேசுவது, ஒருவரை உயர்த்தாது. அது தமிழ் மக்களின் உணர்வுகளை மட்டுமே புண்படுத்தும்.ரஜினிகாந்த், அரசியலில் அதிகாரம் பெற்றவர் அல்லாத நேரங்களிலும், துணிச்சலான கருத்துக்களை வெளிப்படையாக கூறியவர். அவரது வாழ்க்கையில் இதற்கு பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. ஒரு காலத்தில் அதிகாரம் மிகுந்திருந்த சூழலில் கூட அவர் "ஆண்டவனாலும் தமிழகத்தை காப்பாற்ற முடியாது"” எனக் குறிப்பிட்டுள்ளார்.