"அன்பு உள்ளம் கொண்ட இளைஞர்களின் வழிகாட்டி..." - ராமதாஸுக்கு அண்ணாமலை வாழ்த்து!!

 
tn

 பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும்,   தமிழக அரசியல்வாதியுமான ராமதாஸ் இன்று தனது 84ஆவது பிறந்தநாளை கொண்டடுகிறார்.   பாமக கட்சியை தொடங்கிய இவர், அடிப்படையில்  மருத்துவர் ஆவார். மருத்துவக் கல்வி கற்று எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்ற பின்னர் 1967 ஆம் ஆண்டில் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரியத் தொடங்கினார்.

pmk

1980இல் வன்னியர் சங்கம் என்னும் அமைப்பை உருவாக்கிய நிலையில் அதுவே பாட்டாளி மக்கள் கட்சி உருவாக காரணமாக அமைந்தது. தமிழை வளர்ப்பதற்காக பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை,  பசுமைத் தாயகம் என்னும் சமூகநலச் செயல்பாடுகளில் ஈடுபடும் ஒரு தன்னார்வ அமைப்பு  ஆகியவற்றை நடத்தி வரும் இவர், பூரண மதுவிலக்கிற்காக கடந்த  34 ஆண்டுகளாகத் தொடர்ந்து போராடி வருகிறார்.



இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று தனது 84 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை அவருக்கு வாழ்த்து கூறியுள்ளார். இதுகுறித்து அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், பாட்டாளி மக்களுக்கு அரணாக இருப்பவர், அன்பு உள்ளம் கொண்ட இளைஞர்களின் வழிகாட்டி மருத்துவர் ராமதாஸ் ஐயா அவர்களின் 84வது பிறந்த தினமான இன்று, அவர் நீண்ட ஆயுளுடன் மக்கள் சேவையைத் தொடர பாஜக சார்பாக வாழ்த்துகிறேன்! என்று பதிவிட்டுள்ளார்.