பெண் குழந்தைகளின் உரிமைகளை உறுதிப்படுத்துவது நம் கடமை- அண்ணாமலை

 
 அண்ணாமலை

தேசிய பெண் குழந்தை நாள் (National Girl Child Day) இந்தியாவில் 2009 ஆண்டு முதல் ஆண்டு தோறும் ஜனவரி 24 அன்று கொண்டாடப்படுகிறது. 

BJP 'firmly backs' Tamil Nadu party chief after AIADMK ends alliance:  Sources - India Today

இதையொட்டி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “ஆண் பெண் என்ற பேதமின்றி அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்கவும், பெண் குழந்தைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தேசிய பெண் குழந்தைகள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.


பெண் குழந்தைகள் அனைவருக்கும், தேசிய பெண் குழந்தைகள் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆணுக்குப் பெண் இளைப்பில்லை காண் என்ற மகாகவியின் வாக்கிற்கிணங்க, இன்று பெண்கள் சாதனை படைக்காத துறைகளே இல்லை எனலாம். பெண் குழந்தைகளுக்கான வாய்ப்புகளைத் தொடர்ந்து வழங்குவதும், பெண் குழந்தைகளின் உரிமைகளை உறுதிப்படுத்துவதும் நம் ஒவ்வொருவரின் கடமையாகும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.