பாஜக வேட்பாளர்களுக்கு தோளோடு தோள் நின்று பிரசாரம் செய்வேன் - அண்ணாமலை

 
அமித்ஷா, நட்டாவுடன் பூட்டிய அறையில் பேசிய கருத்துகளை வெளியே சொல்ல முடியாது- அண்ணாமலை

வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அண்ணாமலையின் பெயர் இடம்பெறவில்லை. 2021 சட்டமன்றத் தேர்தலில் அண்ணாமலை அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு, தோல்வி அடைந்திருந்தார்.


இந்நிலையில் பா.ஜ.க வேட்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அண்ணாமலை, “தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர்களுக்கு வாழ்த்துக்கள். திமுகவின் ஆட்சியை அகற்ற அனைத்து மக்களின் ஆதரவும் பாஜக வேட்பாளர்களுக்கு உண்டு. பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர்களுக்காக பரப்புரையில் ஈடுபடுவேன். தேசம் முன்னேறிக் கொண்டிருக்கும் வேளையில், தோல்வியடைந்த, ஆணவமிக்க, சுயநலமிக்க திமுக அரசால் தமிழ்நாடு பின்தங்கியுள்ளது. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 210 இடங்களை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில், ஒரு தொண்டனாகிய நான், வெற்றிபெறும் நமது பாஜக மற்றும் பிற தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள் அனைவருடனும் தோளோடு தோள் நின்று பிரச்சாரம் செய்வேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.