செல்போன் தடை பக்தர்களை சிரமப்படுத்தும்- அண்ணாமலை

 
அண்ணாமலை

யாரோ ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்காக, லட்சக்கணக்கான பக்தர்களுக்கு தேவையற்ற சிரமத்தை ஏற்படுத்துவது, மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டையே கொளுத்திய கதையாக மாறிவிடக் கூடாது என வீ த லீடர்ஸ் அமைப்பு தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

Annamalai

இதுதொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில், “கோவில்களில் மொபைல் போன் கொண்டு செல்லக் கூடாது என்ற விதிமுறையால், ரூ.5 டோக்கன் பெறுவதற்கே நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நிம்மதியாக தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு, இந்த ஏற்பாடு தேவையற்ற பதற்றத்தையும் சிரமத்தையும் ஏற்படுத்துகிறது.மக்களின் ஆன்மிக நம்பிக்கையையும், வழிபாட்டு உரிமையையும் எளிதாக்குவதற்குத்தான் கோவில் நிர்வாக விதிமுறைகள் இருக்க வேண்டும். கோவிலுக்குச் செல்வதையே யோசிக்க வைக்கும் அளவுக்கு அவை சிரமங்களை உருவாக்கக் கூடாது.

யாரோ ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்காக, லட்சக்கணக்கான பக்தர்களுக்கு தேவையற்ற சிரமத்தை ஏற்படுத்துவது, மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டையே கொளுத்திய கதையாக மாறிவிடக் கூடாது.எனவே, தமிழக அரசு இந்த விதிமுறையை உடனடியாக மறுபரிசீலனை செய்து, பக்தர்களுக்கு தேவையற்ற சிரமத்தை ஏற்படுத்தும் இந்த நடைமுறையைத் திரும்பப் பெற வேண்டும். கோவில்கள் மக்களுக்கு நிம்மதியையும் இறைநம்பிக்கையையும் தரும் இடங்களாக இருக்க வேண்டும். பதற்றத்தையும் நீண்ட வரிசைகளையும் உருவாக்கும் இடங்களாக அல்ல” எனக் குறிப்பிட்டுள்ளார்.