என்னுடன் செருப்பு அணியாமல் இருந்த அனைவரும் விரதத்தை நிறைவு செய்யுங்கள்- அண்ணாமலை

தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும், மக்கள் விரோத திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் என்ற உறுதியோடு, கடந்த சுமார் நான்கு மாதங்களாக, நான் உட்பட தமிழக பாஜக சகோதர சகோதரிகள் பலரும், காலணி அணியாமல் விரதத்தை மேற்கொண்டு வருகிறோம் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கூறியுள்ளார்.
தமிழக முன்னாள் பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் வரையில், காலணி அணியமாட்டேன் என்று சபதம் விடுத்திருந்தார். அதற்கேற்றவாறே, எங்கு சென்றாலும் காலணி அணியாமலேயே சென்றார். இந்நிலையில், இன்று சென்னை, வானகரத்தில் உள்ளதொரு திருமண மண்டபத்தில் நடைபெற்ற கட்சி விழாவில், பாஜக மாநிலத் தலைவராகப் போட்டியின்றி தேர்வாகியுள்ள நயினார் நாகேந்திரனுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டு, அவர் அதிகாரபூர்வமாக கட்சி தலைவராகப் பதவியேற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியின்போது, அண்ணாமலையை காலணி அணியுமாறு நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்தார். இதனையடுத்து, நயினார் நாகேந்திரனின் கோரிக்கைக்கு இணங்க, அண்ணாமலை காலணியை அணிந்து கொண்டார்.
தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும், மக்கள் விரோத திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் என்ற உறுதியோடு, கடந்த சுமார் நான்கு மாதங்களாக, நான் உட்பட @BJP4Tamilnadu சகோதர சகோதரிகள் பலரும், காலணி அணியாமல் விரதத்தை மேற்கொண்டு வருகிறோம்.
— K.Annamalai (@annamalai_k) April 13, 2025
நேற்றைய தினம், @BJP4Tamilnadu மாநிலத் தலைவர்,…
தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும், மக்கள் விரோத திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் என்ற உறுதியோடு, கடந்த சுமார் நான்கு மாதங்களாக, நான் உட்பட @BJP4Tamilnadu சகோதர சகோதரிகள் பலரும், காலணி அணியாமல் விரதத்தை மேற்கொண்டு வருகிறோம்.
— K.Annamalai (@annamalai_k) April 13, 2025
நேற்றைய தினம், @BJP4Tamilnadu மாநிலத் தலைவர்,…
இந்நிலையில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் தனது எக்ஸ் தளத்தில், “தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும், மக்கள் விரோத திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் என்ற உறுதியோடு, கடந்த சுமார் நான்கு மாதங்களாக, நான் உட்பட தமிழக பாஜக சகோதர சகோதரிகள் பலரும், காலணி அணியாமல் விரதத்தை மேற்கொண்டு வருகிறோம். நேற்றைய தினம், பாஜக மாநிலத் தலைவர், அன்பு அண்ணன் திரு. நயினார் நாகேந்திரன் அவர்களின் அன்பு அறிவுறுத்தலை ஏற்று, தமிழகத்தில், வரும் சட்டமன்றத் தேர்தலில், நமது தேசிய ஜனநாயகக் கூட்டணி, திமுக ஆட்சியை நிச்சயம் அகற்றும் என்ற உறுதியுடன், காலணி அணியத் தொடங்கியிருக்கிறேன். என்னுடன் விரதம் மேற்கொண்டு வந்த தமிழக பாஜக சகோதர சகோதரிகள், வரும் நாட்களில், தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் கல்லையும் முள்ளையும் கடந்து பயணப்பட்டு, தங்கள் கடின உழைப்பை வழங்க வேண்டிய தேவை இருக்கிறது. ஆகவே, அண்ணன் திரு . நயினார் நாகேந்திரன் அவர்களின் அன்பு அறிவுறுத்தலை ஏற்று, அனைவரும் தங்கள் விரதத்தை நிறைவு செய்ய வேண்டும் என்று, உங்கள் அன்பு சகோதரனாகக் கேட்டுக் கொள்கிறேன். வாழ்க தமிழ். வளர்க பாரதம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.