“டாஸ்மாக் ஊழலின் முதல் குற்றவாளி மு.க.ஸ்டாலின்”- அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு

 
annamalai mkstalin annamalai mkstalin

டாஸ்மாக் ஊழலின் முதல் குற்றவாளி, முதலமைச்சர் திரு.  மு.க.ஸ்டாலின் தான். இது தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.

Image

இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில், “திமுக அரசின் 1000 கோடி ரூபாய்க்கு அதிகமான டாஸ்மாக் ஊழலை எதிர்த்து, தமிழக பாஜக சார்பில் இன்று நடைபெறவிருந்த முற்றுகைப் போராட்டத்தை, பாஜக தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை கைது செய்திருப்பதன் மூலம்  முடக்கியிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறது திமுகவின் காவல்துறை. 


டாஸ்மாக் ஊழலின் முதல் குற்றவாளி, முதலமைச்சர் திரு.  மு.க.ஸ்டாலின் தான். இது தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும். எங்கள் போராட்டம் தொடரும். உங்களால் இன்னும் எத்தனை முறை எங்களைத் தடுக்க முடியும் என்று பார்க்கலாம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.