அதிகாரிகள் முன் தீக்குளித்த இளைஞர்- அண்ணாமலை கண்டனம்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் பட்டா நிலத்தில் உள்ள 54 வீடுகளை ஆக்கிரமிப்பு எனக் கூறி அதிகாரிகள் அகற்ற முயற்சித்தனர். அப்போது வீட்டை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து வீட்டின் உரிமையாளரான ராஜ்குமார் என்ற இளைஞர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கு வேதனை தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “இந்த திமுக ஆட்சியில் ரியல் எஸ்டேட் முதலாளிகள் பலன்களையும், சலுகைகளையும் அனுபவிக்கும் அதே வேளையில், சாமானியர்களின் வீடுகள் சட்டவிரோதக் கட்டுமானங்கள் எனக்கூறி இடிக்கப்படுகின்றன. சென்னை அருகே கும்மிடிப்பூண்டியில் பட்டா நிலத்தில் கட்டப்பட்ட தனது வீட்டை அரசு அதிகாரிகள் இடிக்கவிடாமல் தடுக்க முயன்ற இளைஞர், ஒருவர் தீக்குளிக்க முயன்றார். ஆனால் வீட்டு வசதித்துறை அமைச்சரான முத்துசாமி, தீபாவளிக்கு முன்னதாக டாஸ்மாக்கில் 90 மில்லி பாட்டில்களை அறிமுகப்படுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்” என காட்டமாக விமர்சித்துள்ளார்.
While the real estate moguls enjoy benefits & unprecedented privileges in this DMK regime, the houses of common men are razed down as illegal construction.
— K.Annamalai (@annamalai_k) July 4, 2024
A youth in Gummidipoondi near Chennai tried to self-immolate in his attempt to stop the government officials from… pic.twitter.com/wqML9X3xOK