“தேதியை மட்டும் சொல்லுங்க! விருந்து ரெடி பன்றோம்”.. காங்கிரஸ் கட்சியினரை கிண்டலடிக்கும் அண்ணாமலை

 
அண்ணாமலை

ஒடிசாவில் தமிழ்நாடு, தமிழர்கள் குறித்து அவதூறாக பேசிய பிரதமர் மோடியும், அமித்ஷாவும் ஒரு வாரத்திற்குள் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் தமிழ்நாடு பாஜகவின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்திருந்தார்.

திமுகவின் சர்வாதிகாரப் போக்கு ஜனநாயகத்துக்கு ஆபத்து'' - கடலூர் பெண்  கொலைக்கு அண்ணாமலை கண்டனம் | DMK's dictatorial tendencies are a danger to  democracy says annamalai ...

இதற்கு பதிலளித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “தமிழக பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக, காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் அறிவித்துள்ளதாக அறிந்தேன். எங்கள் அலுவலகம் வரவிருக்கும் தேதியை முன்பே அறிவித்தால், வரும் பத்து பேருக்கும், உணவு ஏற்பாடு செய்ய வசதியாக இருக்கும். மேலும், வரும் அனைவருக்கும், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி தமிழர்களுக்குச் செய்த துரோகங்கள் குறித்த புத்தகமும் பரிசாக வழங்கலாம் என்று இருக்கிறோம். 


எப்படி திமுகவும் காங்கிரஸும் தமிழினத்துக்கே எதிரியாக விளங்குகின்றன என்ற காணொளியையும், அன்றைய தினம் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றவும் முடிவு செய்துள்ளோம்.  எனவே, காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் அவர்கள், எங்கள் மாநிலத் தலைமை அலுவலகம் வரவிருக்கும் தேதியை மட்டும்,  முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களது whatsapp சேனலை Follow செய்யுங்கள்:

https://whatsapp.com/channel/0029VaDmE2aGehELVeirsJ2r