கோவை டாஸ்மாக்கில் காலாவதியான மதுவிற்பனை! முதல்வருக்கு அருவருப்பா இல்லையா?- அண்ணாமலை

 
annamalai mkstalin annamalai mkstalin

பொதுமக்களின் உயிரை வைத்து வருமானம் ஈட்ட முதலமைச்சருக்கு அருவருப்பாக இல்லையா? என பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

Image

இதுதொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில், “கோயம்புத்தூரில், பொங்கல் பண்டிகை விற்பனைக்காக, தேதி காலாவதியான மதுவை டாஸ்மாக் கடைகளில் விற்பனைக்கு திமுக அரசு வைத்திருப்பதாக நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. பொதுமக்களின் உயிர், உடல்நலம், குறித்து சிறிதளவும் அக்கறை இல்லாமல்,  வருமானம் வந்தால் போதும் என்ற ஒரே நோக்கம் கொண்ட திமுக அரசின் இந்தச் செயல்பாடு, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.


மது விற்பனை மூலமாக பல ஆயிரக்கணக்கான கோடிகள் வருவாய் ஈட்டும் திமுக அரசு, குறைந்தபட்சம், விற்பனை செய்யும் மதுவின் தரத்தைக் கூடப் பாதுகாக்கத் தவறுவது, திட்டமிட்ட குற்றம். காலாவதியான மதுவை விற்பதால் பாதிக்கப்படுவது முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் குடும்பமோ, அல்லது திமுக அமைச்சர்கள் குடும்பமோ அல்ல, 
அப்பாவி பொதுமக்களும், அவர்களது குடும்பங்களும் மட்டுமே. பொதுமக்களின் உயிரை வைத்து வருமானம் ஈட்ட முதலமைச்சருக்கு அருவருப்பாக இல்லையா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.