கான்கிரீட் வீட்டில் வசிக்க ஆசைப்பட்டதாகக் கூறிக் கண் கலங்கிய மோடி- அண்ணாமலை
தமது இளம் வயதில் இது போன்ற கான்கிரீட் வீட்டில் வசிக்க ஆசைப்பட்டதாகக் கூறி பிரதமர் மோடி கண் கலங்கியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று, ஏழை எளிய மக்களுக்காக பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளை மக்களுக்கு வழங்கும் விழாவில் மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி கலந்து கொண்டு பொதுமக்களுடன் உரையாடினார். மிகவும் எளிய குடும்பத்தில் பிறந்த நமது பிரதமர் அவர்கள், தமது இளம் வயதில் இது போன்ற கான்கிரீட் வீட்டில் வசிக்க ஆசைப்பட்டதாகக் கூறிக் கண் கலங்கினார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று, ஏழை எளிய மக்களுக்காக பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளை மக்களுக்கு வழங்கும் விழாவில் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுடன் உரையாடினார்.
— K.Annamalai (@annamalai_k) January 19, 2024
மிகவும் எளிய குடும்பத்தில் பிறந்த நமது… pic.twitter.com/Flku33chJk
நாடு முழுவதும் எளிய மக்களின் அடிப்படைத் தேவைகளான வீடு, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அனைத்தையும் நமது மத்திய அரசு நிறைவேற்றி வருவதற்கு, நமது பிரதமர் அவர்களும் எளிய பின்புலத்தில் இருந்து வந்ததே முக்கியக் காரணம்” என வீடியோவுடன் குறிப்பிட்டுள்ளார்.