தென் மாவட்டங்களுக்கு செல்லும் அண்ணாமலை! என் மண் என் மக்கள் பயணம் வேறு தினங்களுக்கு மாற்றம்

 
Annamalai Annamalai

நாளைய, டிசம்பர் 19, 2023 நடைபயண நிகழ்ச்சி, ஏற்கனவே திட்டமிட்டபடி நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்வதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். 

En Mann En Makkal: 'குடிப்பதில் நெம்பர் ஒன் மாநிலம் தமிழ்நாடு' யாத்திரையில்  அண்ணாமலை ஆவேசம்-en mann en makkal bjp state president annamalai speech at  aranthangi pudukottai district - HT ...

இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “கனமழை காரணமாக, தென்மாவட்டங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி இருப்பது வேதனையை அளிக்கிறது. இந்தக் கடினமான நேரத்தில், தமிழக பாஜக தென்மாவட்ட மக்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்று உறுதி அளிக்கிறோம். பொதுமக்களுடன் தோளோடு தோளாக நின்று, தமிழக பாஜக சகோதர சகோதரிகளும், நிர்வாகிகளும், களத்தில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருவது ஆறுதலைத் தருகிறது. 


வரும் டிசம்பர் 20, 21 ஆகிய தினங்களில், மழை வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் தென் மாவட்ட மக்களுக்கான உடனடி நிவாரணத் தேவைகளை நிறைவேற்றி உதவ, தென் மாவட்ட மக்களை, தமிழக பாஜக சகோதர சகோதரிகளுடன் நேரில் சென்று சந்திக்க உள்ளதால், அன்றைய தினங்களில் நடைபெற இருந்த என் மண் என் மக்கள் பயணம் வேறு தினங்களுக்கு மாற்றி வைக்கப்படுகிறது. அதற்கான விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். நாளைய, டிசம்பர் 19, 2023 நடைபயண நிகழ்ச்சி, ஏற்கனவே திட்டமிட்டபடி நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.