மது போதையில் வாகனத்தை ஓட்டி இருவர் பலி- திமுக அரசே காரணம் என அண்ணாமலை குற்றச்சாட்டு

 
annamalai

சென்னை அண்ணா நகரில் அதிவேகமாக வந்த கார் சாலையோரம் நின்று கொண்டிருந்தவர்கள் மீது  மோதிய  விபத்தில் 6 பேர் காயமடைந்த நிலையில் இருவர் உயிரிழந்தனர்.

Annamalai

இச்சம்பவத்துக்கு ட்விட்டரில் வேதனை தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “சென்னை அண்ணா நகரில், இன்று காலை, மது போதையில் வாகனத்தை ஓட்டியதால் ஏற்பட்ட விபத்தில் , இருவர் பலியாகியிருக்கிறார்கள். பலர் படுகாயமடைந்துள்ளனர். அதே நேரம்,  தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் நடந்த மது விற்பனை, சுமார் 467.69 கோடி என டாஸ்மாக் நிறுவனம் பெருமையுடன் அறிவித்துள்ளது. 

சென்னை அண்ணாநகர் கார் விபத்தில் இருவர் பலி: விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

மதுவிலக்கு துறையா அல்லது மது விற்பனைத் துறையா என்ற சந்தேகம் வரும் அளவுக்கு, மது விற்பனையில் சாதனை படைத்து வருகிறது திமுக அரசு. மதுவால் ஏற்படும் உடல் நலக் குறைவு மரணங்கள், இது போன்ற விபத்துக்களால் பலியாகும் அப்பாவிகளின் மரணங்கள் எதைப் பற்றியும் கவலை இன்றி, உச்ச வரம்பு நிர்ணயித்து மது விற்பனை நடத்தி வருகிறது திமுக.


திமுகவினர் நடத்தும் மது ஆலைகளிடம் வாங்கி விற்கும் டாஸ்மாக் நிறுவனத்தின் விற்பனை இத்தனை என்றால், அந்த ஆலைகள் நடத்தும் திமுகவினரின் வருமானம் என்னவாக இருக்கும்? தங்கள் கட்சிக்காரர்கள் வருமானத்துக்காக, அப்பாவிப் பொதுமக்கள் உயிரை பலிகொடுத்துக் கொண்டிருக்கிறது திமுக” எனக் குறிப்பிட்டுள்ளார்.