பாரத மண்டபத்தில் நடராஜர் சிலை- பிரதமருக்கு அண்ணாமலை நன்றி

 
பாரத மண்டபத்தில் நடராஜர் சிலை- பிரதமருக்கு அண்ணாமலை நன்றி

நடராஜர் சிலையை, பாரத மண்டபத்தில் நிறுவிப் பெருமைப்படுத்தியதற்காக, பிரதமர் மோடிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார். 

Annamalai

இதுதொடர்பாக அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “பாரதத்தின் வளமான கலாச்சாரத்தையும், தொன்மையான வரலாற்றையும், கலைத் திறனையும் எடுத்துக்காட்டும் வண்ணம், தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில் உருவாக்கப்பட்ட 28 அடி உயர, உலகிலேயே உயரமான நடராஜர் சிலையை, பாரத மண்டபத்தில் நிறுவிப் பெருமைப்படுத்தியதற்காக, மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திரமோடிக்கு தமிழ் மக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Image

ஜி20 உச்சி மாநாட்டிற்காக, பாரதத்தின் தலைநகரில் கூடியிருக்கும் உலக நாடுகளுக்கு, நமது பாரம்பரியத்தை உணர்த்தும் இந்த அற்புதமான சிலையை வடிவமைத்த சிற்பிகள் திரு. ஸ்ரீகாந்த ஸ்தபதி, அவரது சகோதரர்கள் திரு. ராதாகிருஷ்ண ஸ்தபதி மற்றும் திரு. சுவாமிநாத ஸ்தபதி மற்றும் அவர்களது சிற்பக்கூடக் கைவினைக் கலைஞர்கள் அனைவருக்கும் தமிழக பாஜக சார்பாக மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.