யாரு எட்டிப் பார்த்தா என்ன? முதலீடு கொடுக்குற நிலைமையிலா லண்டன் இருக்கு? – வீ த லீடர்ஸ் அண்ணாமலை கேள்வி

 
யாரு எட்டிப் பார்த்தா என்ன? முதலீடு கொடுக்குற நிலைமையிலா லண்டன் இருக்கு? – வீ த லீடர்ஸ் அண்ணாமலை கேள்வி

பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையையும், பிராமண துவேஷத்தை நான் ஏற்கவில்லை என வீ த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையையும், பிராமண துவேஷத்தை நான் ஏற்கவில்லை. அதேசமயம் பெரியாரின் பெண் இன விடுதலையையும், சாதி ஒழிப்பையும் நான் ஏற்கிறேன். நாம் ஆட்சிக்கு வரும் பொழுது இந்து சமய அறநிலையத்துறை அக்கற்றப்படும் என்பது உறுதி. உதாரணத்திற்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்த கும்பாபிஷேகம் நிகழ்வைப் பற்றி சொல்லலாம். தவெக அரசு சினிமாவில் ப்ளாக் டிக்கெட் விற்பது போல, கும்பாபிஷேக டிக்கெட்டுகளை விற்றார்கள். மதுரை மக்கள் மீது தீர்த்தம் கூட தெளிக்கவில்லை.


இங்கிலாந்தை விட இந்திய பொருளாதாரம் பெரியது.  இந்தியாவை விட பொருளாதார வளர்ச்சியில் பின் தங்கிய பிரிட்டனுக்குச் சென்று எப்படி முதலீட்டை ஈர்க்க முடியும்? லண்டனில் டாட்டா போன்ற இந்திய நிறுவனங்களே அதிக முதலீடு செய்கின்றன. லண்டன் போறேன்னு சொல்றதெல்லாம் பழைய அரசியல்.. லண்டன்லேயே பொருளாதாரம் இல்ல, அவன் எப்படி நம்மகிட்ட போடுவான்? இந்தியாவில் தொழிலதிபர்களிடம் பேசி முதலீட்டை ஈர்க்கலாம்.. உள்ளூர் தொழிலதிபர்களே தயாரா இருக்காங்க. திருமாவளவனை பொறுத்தவரை ஒரே ஒரு தலைவர் இருக்கணும்.. அந்த தலைவருக்கு எல்லாரும் கைக்கட்டி ஊழியம் பண்ணணும்... அந்த ஒரே தலைவர் மேல போகணும், அவங்க பிள்ளைகள் தலைவரா வரணும். வீ த லீடர்ஸ் அமைப்பின் அடிப்படை நோக்கமே புதிய அரசியலை தமிழகத்தில் ஏற்படுத்த வேண்டும் என்பதே” என பேசினார்.