“அமைச்சர்கள் கமிஷன் வாங்க ஆரம்பிச்சுடாங்க... என்னிடம் ஆடியோ ஆதாரம் இருக்கு”- அண்ணாமலை பரபரப்பு
“அமைச்சர்கள் கமிஷன் வாங்க ஆரம்பிச்சுடாங்க... என்னிடம் ஆடியோ ஆதாரம் இருக்கு” என வீ தி லீடர் தலைவர் அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தமிழ்நாட்டை லஞ்சம் மற்றும் ஊழலற்ற மாநிலமாக மாற்றுவதே தனது அரசின் முக்கிய இலக்கு என்று முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தனது சுதந்திர தின உரையில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஊழலுக்கு எதிரான விடுதலை: தமிழகத்தை லஞ்சம், ஊழலில் இருந்து காப்பாற்றுவது மற்றொரு பெரிய சுதந்திரப் போராட்டத்திற்குச் சமம், பொதுமக்கள் லஞ்சத்திற்கு எதிராகச் சிறிதும் சகித்துக் கொள்ளாத மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். பொதுமக்கள் லஞ்சத்திற்கு எதிராகச் சிறிதும் சகித்துக் கொள்ளாத மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.மக்கள் சேவை. முதலமைச்சர் உட்பட மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் மக்களின் ஊழியர்களே தவிர ஆட்சியாளர்கள் அல்ல. வாக்களிப்பதோடு கடமை முடிந்துவிடவில்லை, ஊழலுக்கு எதிரான இந்த மிஷனில் மக்கள் அரசுடன் கைகோர்க்க வேண்டும் என்று முதல்வர் விஜய் பேசியுள்ளார்.
“அமைச்சர்கள் கமிஷன் வாங்க ஆரம்பிச்சுடாங்க... என்னிடம் ஆடியோ ஆதாரம் இருக்கு” என வீ தி லீடர் தலைவர் அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
புதிய அமைச்சர்கள் சிலர் பணம் பெறுவதை முதல்வர் விஜய் நிச்சயம் கவனிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க விட்டால் இன்னும் சில மாதங்களில் அண்ணாமலை நிச்சயம் அந்த ஆடியோவை வெளியிடுவார். இது முதல்வர் விஜயின் ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்தை முடக்கிவிடும். மக்கள் மத்தியில் அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

