“ எதிரிகள் ஒரு அடி கை நீட்டினால் நாம் நான்கு அடி திருப்பி கொடுத்துள்ளோம்”- அண்ணாமலை

 
ச்

இந்தியாவுக்கு அருகில் பாகிஸ்தான் இருப்பது என்பது 500 ரூபாய் நோட்டு அருகே 25 பைசா நாணயத்தை வைப்பதற்கு ஒப்பானது என அண்ணாமலை கூறினார்.

‘Operation Sindoor - The Untold Story' புத்தக வெளியீட்டு விழாவில் உரையாற்றிய வீ தி லீடர்ஸ் தலைவர் அண்ணாமலை, “மாணவர்கள் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம் இது. ராணுவ வீரர்களின் கடின உழைப்பை இது வெளிப்படுத்தும். நாம் பாராட்டவில்லை என்றாலும், அவர்களது வேலை நடந்துக்கொண்டே தான் இருக்கும் என்பதை இந்த புத்தகம் நமக்கு கூறும். இந்நூல் இளைஞர்கள் மத்தியில் ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி, இந்திய ராணுவத்தில் இணைந்து பாரத தாய்க்கு சேவை செய்ய வேண்டும் என்ற உத்வேகத்தை அளிக்கும் என நான் நம்புகிறேன். “அமரன்” திரைப்படம் வெளியான பிறகு, மேஜர் முகுந்த் வரதராஜன் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார். ஆனால், தங்களுடைய மகனை இந்திய ராணுவத்திற்கு அர்ப்பணித்து, அவர் வீரமரணம் அடைந்த நிலையிலும், அதே கம்பீரத்துடனும் மன உறுதியுடனும் முகுந்த் வரதராஜனின் தந்தையும் தாயாரும் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுடன் சுமார் இரண்டு மணி நேரம் செலவிட்டபோது, ​​"உங்கள் மகனை எப்படி ராணுவத்திற்கு அனுப்பத் துணிந்தீர்கள்? முகுந்த் வீரமரணம் அடைந்தபோது உங்கள் மனநிலை எப்படி இருந்தது? இப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என பல கேள்விகளை கேட்டேன். அவர்களுடன் உரையாடிய தருணம் நெகிழ்ச்சிகரமாக இருந்தது.

ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, ​​இந்தியாவின் அணு மற்றும் ஏவுகணைத் திறனை மேலும் வலுப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அதன்பின், பிரதமர் நரசிம்ம ராவ் காலத்தில், அணு ஆயுதச் சோதனைக்கான தயாரிப்புகள் குறித்து கலாமுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டது. 1998-ல் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், கலாமிடம் ஒரு வரியில் சொன்னார்: “பட்டாசு வெடிக்கத் தயாராகுங்கள். அதன் பின்னர், போக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்துவதற்கான நடவடிக்கைகள் ரகசியமாக முன்னெடுக்கப்பட்டன. சோதனை வெற்றிகரமாக முடிந்ததும், பிரதமர் வாஜ்பாய்க்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.இந்தியாவுக்கு அருகில் பாகிஸ்தான் இருப்பது என்பது 500 ரூபாய் நோட்டு அருகே 25 பைசா நாணயத்தை வைப்பதற்கு ஒப்பானது. நமது ராணுவம் எதிரிகளுக்கு ரூ.14,500 கோடி அளவிற்கு சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிரிகள் ஒரு அடி கை நீட்டினால், நாம் நான்கு அடி திருப்பிக் கொடுத்துள்ளோம்” என்றார்.