“ஆமா.. அதிமுக அடிமை கட்சி தான்”- அண்ணாமலை
“ஆமா.. அதிமுக அடிமை கட்சி தான்”- அண்ணாமலைதமிழகத்தில் திமுக வந்த பிறகு தான் மத வேறுபாடு வந்தது. திருமாவளவன் வந்த பிறகு தான் ஜாதி பிளவுகள் வந்தது. இரண்டுமே விசம்தான் என பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அண்ணாமலை, “மத்திய அரசால் 125 நாட்களாக உயர்த்தப்பட்ட வேலை வாய்ப்பு திட்டத்தை 2026ல் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரான பிறகு 150 நாட்களாக உயர்த்துவார். 125 நாட்களாக உயர்த்தப்பட்ட வேலை வாய்ப்பு திட்டத்தில் இந்தியாவிலேயே மற்ற மாநிலங்களை விட தமிழகத்திற்கு அதிக நிதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் எங்கேயுமே கஞ்சா நடமாட்டம் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகிறார். ஸ்டாலின் நடத்தும் நடைபயிற்சி ஷூட்டிங்கிற்கான ஏற்பாட்டிலேயே தனது முழு நேரத்தையும் செலவிடுவதால் அமைச்சருக்கு உண்மை நிலை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தமிழகத்தை குப்பைமேடாக, குடிகாரநாடாக மாற்றியது திமுக தான். உங்களை நம்பி ஓட்டளித்து ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியடற்கான விலையை மக்கள் இன்று தினமும் அனுபவித்து வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் நிரந்தரமாக வீட்டிற்கு செல்ல வேண்டிய நாள் இனி வெகுதூரத்தில் இல்லை. ஆமா.. என்னை பொறுத்தவரை அதிமுக அடிமை கட்சி தான். மக்களை எஜமானர்களாக நினைத்து அவர்களுக்கு அடிமையாக உள்ளனர். தமிழ்நாட்டு மக்களுக்கு NDA கூட்டணியும் அடிமை தான்” என்றார்.


