குடிகார மாநிலம் தமிழகம்! டாஸ்மாக் மூலம் அரசுக்கு மட்டும் ரூ.44,000 கோடி வருமானம்

 
அண்ணாமலை

"என் மண் என் மக்கள்" யாத்திரை நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் சட்டமன்ற தொகுதி பழைய பஸ் நிலையத்தில் இருந்து பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை துவக்கினார். இவருடன் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்,மாநிலத் துணைத் தலைவர் கே பி ராமலிங்கம் உட்பட கட்சி தொண்டர்கள் 200 - க்கு மேற்பட்டோர் கடைவீதி வழியாக நடைபயணத்தில் கலந்து கொண்டனர். அண்ணாமலையை வரவேற்கும் விதமாக பழைய பஸ் நிலையத்தில் ஸ்ரீ ராமர் பேனர் வைக்கப்பட்டு அங்கு தமிழர்களின் பாரம்பரிய மேளதாள நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நடைபயணமானது பழைய பேருந்து நிலையத்திலிருந்து துவங்கி சின்ன கடைவீதி, பட்டணம் சாலை ,வி. நகர் ரோடு வழியாக புதிய பேருந்து நிலையம் சென்றடைந்தது.

Image

புதிய பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்ட மேடையில் பேசிய அண்ணாமலை, “இந்திய அளவில் தமிழக அரசு அதிக கடன் வாங்கியுள்ள மாநிலமாக உருவாகியுள்ளதன் மூலம் பெரும் கடன் சுமையில் மூழ்கியுள்ளது. இந்தியாவில் தமிழகம் அதிகம் கடன் வாங்கிய மாநிலமாக உருவாகியுள்ளது. தமிழக 5.50 லட்சம் கோடி கடன் இருந்த நிலையில் தற்போது மொத்தக்கடன் 7 லட்சத்து 53 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு குடும்பத்தின் மீது ரூ.3 லட்சத்து 52 ஆயிரம் என்பதாகும். இதிலிருந்து நாம் மேலும் கடன் வாங்கவில்லை என்றாலும், வாங்கிய கடனை நாம் திருப்பி செலுத்த 35 ஆண்டுகளாகும்.

கடந்த 9 ஆண்டுகளாக  சாதாரண மக்களுக்கான சாமானியன் நடத்திய கொண்டிருக்கும் ஆட்சி மத்தியில் ஆண்டு கொண்டிருக்கிறது. திமுக கடந்த தேர்தலில் 511 வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்தது. ஆனால் வெறும் 20 வாக்குறுதிகளை மட்டும் நிறைவேற்றிவிட்டு மக்களை நடுக்கடலில் விட்டு விட்டது. வரும் 2024-ம் ஆண்டு தேர்தலில் பிரதமர் நரேந்திரமோடியை மீண்டும் 3-வது முறையாக ஆட்சியில் அமரவைப்பதிலும்,  திமுக-வை வீட்டு அனுப்பவதிலும் மக்கள் உறுதியாக இருக்க வேண்டும். 

Image

குடிகார மாநிலமாக தமிழகம் உருவாக்கப்பட்டுள்ளது. அரசுக்கு மட்டுமே டாஸ்மாக் வருமானம் 44 ஆயிரம் கோடி. இந்த ஆண்டு ரூ.50 ஆயிரம் கோடியாக உயரும். தமிழகத்தில் ஐந்தில் ஒருவர் மதுவிற்கு அடிமையாகி உள்ளனர். இது போன்ற நிலைக்கு காரணம் திமுகவை சேர்ந்தவர்களே மதுபான ஆலையை நடத்தி வருகிறார்கள் என்பது தான் காரணம். அவர்கள் வாழ வேண்டும் என்பதற்காகவே மதுபானம் தொடர்ந்து விற்கப்படுகிறது” என்றார்.