விமான நிலையத்திற்கான மாற்று இடத்தை விஜய் கூற வேண்டும்- அண்ணாமலை

 
விமான நிலையத்திற்கான மாற்று இடத்தை விஜய் கூற வேண்டும்- அண்ணாமலை விமான நிலையத்திற்கான மாற்று இடத்தை விஜய் கூற வேண்டும்- அண்ணாமலை

பரந்தூர் வேண்டாம் என்றால் வேறு இடம் தேர்வு செய்து சொல்லுங்கள் விஜய்  என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.

Image


காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் அமையவிருக்கும் புதிய விமான நிலையத்திற்கு நிலத்தை கையகப்படுத்துவதை எதிர்த்து பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய், தண்டலம் என 13 கிராம மக்கள் கடந்த 910 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களை நேரில் சந்தித்து கலந்துரையாட விஜய் திட்டமிட்டு இருந்தார். இதற்காக தனியார் திருமண மண்டபத்தில் நிகழ்ச்சியை நடத்த காவல்துறையினர் அனுமதி அளித்தனர். அத்துடன் சம்பந்தப்பட்ட 13 கிராம பகுதிகளை சேர்ந்த மக்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் மற்றவர்களுக்கு அனுமதி கிடையாது எனவும் காவல்துறை தரப்பு கூறியிருந்தது. அதேசமயம் ஒரு மணிக்குள் விஜய் மக்களை சந்தித்து விட்டு புறப்பட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்கள். இந்த நிகழ்வுக்கு புறப்பட்ட விஜயின் சில இடையூறுகளுக்கு மத்தியில் 12:15 மணியளவில் நிகழ்ச்சி நடைபெறும் வளாகத்திற்கு வந்தது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் தொண்டர்களுக்கு கையசைத்து வாரு பிரச்சார வாகனத்தில் வந்த விஜய் தன்னுடைய பேச்சை தொடங்கினார்.  விவசாயிகள் மத்தியில் பேசிய விஜய், வளர்ச்சிக்கு எதிரானவன் நான் அல்ல, ஏர்போர்ட் வேண்டாம் என்று நான் சொல்லவில்லை, இங்கு ஏர்போர்ட் வேண்டாம் என்று தான் சொல்கிறேன் என்று கூறினார். விவசாயிகளுக்கு அதிக பாதிப்பில்லாத இடத்தில் விமான நிலையத்தை அமைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். அத்துடன் மத்திய அரசு இந்த திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்தார். 

அண்ணாமலை

இந்நிலையில் விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “தமிழகம் போன்ற வளர்ந்துவரும் மாநிலத்திற்கு புதிய விமான நிலையம் அவசியமானது.. முழு தமிழ்நாடும் புதிய விமான நிலையம் வேண்டும் என்பதை விரும்புகிறது. பரந்தூரில் விமான நிலையம் வேண்டாம் என்றால், மாற்று இடத்தை விஜய் கூற வேண்டும். பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக ஆக்கப்பூர்வமான யோசனைகளை விஜய் வழங்கலாம். நிலம் எடுப்பு விவகாரம் முழுவதும் மாநில அரசு தொடர்புடையது என்பதால், மாநில அரசிடம் அவர் தனது பரிந்துரைகளை தெரிவிக்க வேண்டும்,.மத்திய அரசுக்கும் பரந்துரை தேர்வு செய்ததுக்கும் சம்மந்தம் இல்லை. மாநில அரசு தேர்வு செய்து அளித்த பட்டியலில் பரந்தூர் இருந்தது” எனக் கூறியுள்ளார்.