‘கோவில் படத்தில் வரும் வடிவேலு நகைச்சுவை’- மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதில்

 
annamalai mkstalin annamalai mkstalin

கோவில் படத்தில் வரும் வடிவேலு நகைச்சுவையை போல, மத்திய அரசின் திட்டங்களுக்கெல்லாம், இது போன்ற நாச்சியப்பன் கடையில், திமுகவின் பெயரைப் பொறித்து மக்களை ஏமாற்றி வந்தது இனியும் நடக்காது என பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பதிலடிக் கொடுத்துள்ளார்.

aNnamalai


பிரதமரின் திட்டத்துக்கு அதிகம் படியளப்பது மாநில அரசுதான் என தரவுகளோடு தி இந்து நாளிதழில் வெளியான செய்தி ஒன்றை சுட்டிக்காட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்த நிலையில், அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில், “இந்தியா முழுவதும், மொத்தம் 54 மத்திய அரசு உதவியில் செயல்படும் திட்டங்களும், 260 மத்திய அரசின் பல்வேறு துறைகளின் நேரடி திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் மட்டும் கடந்த நான்கு ஆண்டுகளில், வரிப்பகிர்வு, மானியங்கள், உதவித் தொகை, திட்டங்களுக்கான பங்கீடு, நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசுத் துறைத் திட்டங்கள் என ₹5,47,280 கோடி நிதி, மத்திய அரசு வழங்கியுள்ளது. 


உண்மை இப்படி இருக்க, முரசொலியை திமுகவினரே படிப்பதில்லை என்பதற்காக, ஆங்கில முரசொலியில் தங்கள் வசதிக்கேற்ற கதைகளை எழுதச் சொல்லி, அதைக் கொண்டு வந்தால், மக்கள் நம்பி விடுவார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள். கோவில் படத்தில் வரும் வடிவேலு நகைச்சுவையை போல, மத்திய அரசின் திட்டங்களுக்கெல்லாம், இது போன்ற நாச்சியப்பன் கடையில், திமுகவின் பெயரைப் பொறித்து மக்களை ஏமாற்றி வந்தது இனியும் நடக்காது” எனக் குறிப்பிட்டுள்ளார்.