“Why telling Lies Bro?”- விஜய்க்கு அண்ணாமலை கேள்வி

சோசியல் மீடியாவில் மட்டுமல்ல திருச்சியில் பாஜக பொதுக்கூட்டம் என களத்திலும் திமுகவுக்கு திருப்பி அடி கொடுப்போம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்று வரும் தவெக 2வது ஆண்டு துவக்க விழாவில் உரையாற்றிய அக்கட்சியின் தலைவர் விஜய், “மொழி விவகாரத்தில் பேசி வைத்து திமுக, பாஜக அரசுகள் மக்களை ஏமாற்றுகிறார்கள். கல்வி நிதி விவகாரத்தில் குழந்தை தனமாக சண்டையிடுகின்றனர். பாஜகவும், திமுகவும் பேசி வைத்துக் கொண்டு மாற்றி மாற்றி ஹேஷ் டேக் போட்டு விளையாடுகின்றனர். தனிப்பட்ட முறையில் யார் வேண்டுமானாலும், எந்த மொழியை வேண்டுமானாலும் படிக்கலாம். சுயமரியாதையை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க முடியாது” என்றார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “விஜய் ப்ரோ உங்கள் குழந்தைக்கு மும்மொழி, நீங்கள் நடத்தும் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மும்மொழி
ஆனால் நீங்கள் மட்டும் மும்மொழியை எதிர்ப்பது ஏன் ப்ரோ?, தவெக தொண்டர்களின் குழந்தைகளுக்கு மட்டும் 2 மொழியா? Practice what you Preach Bro, Why telling Lies Bro? விஜய் சொல்வதை தனது வாழ்க்கையிலும் கடைப்பிடிக்க வேண்டும். நீங்களே ஸ்டேஜில் பொய் சொல்லலாமா Bro? விஜய் Getout கையெழுத்து இயக்கம் ஆரம்பித்த ஒரு நிமிடத்தில், அவருக்கு தேர்தல் ஆலோசனை சொல்லும் பிரசாந்த் கிஷோர் ‘நான் கெட் அவுட்' என சொல்லிவிட்டு கையெழுத்திடாமல் சென்றுவிட்டார். அந்த நடவடிக்கைதான் அதற்கான மரியாதை. சோசியல் மீடியாவில் மட்டுமல்ல திருச்சியில் பாஜக பொதுக்கூட்டம் என களத்திலும் திமுகவுக்கு திருப்பி அடி கொடுப்போம்” என்றார்.