எந்த கேள்வியாக இருந்தாலும் விஜயிடம் கேளுங்கள்; நாங்க என்ன TVK-வின் மார்கெட்டிங் அதிகாரிகளா?- அண்ணாமலை
பாஜகவின் ஏ டீமா, பீ பி டீமா என்பது விஜய் இடம் கேளுங்கள் அவரைத் தவிர அனைவருமே பேசுகிறார்கள். தமிழக வெற்றி கழக நிர்வாகிகளிடம் கேளுங்கள் நாங்கள் என்ன அவர்களுக்கு மார்க்கெட்டிங் ஆபிஸர்களா? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆவேசமாக பேசினார்.
சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது
“பாஜகவின் ஏ டீமா, பீ பி டீமா என விஜய் இடம் கேளுங்கள் அவரைத் தவிர அனைவருமே பேசுகிறார்கள். தமிழக வெற்றி கழக நிர்வாகிகளிடம் கேளுங்கள் நாங்கள் என அவர்களுக்கு மார்க்கெட்டிங் ஆபிஸர்களா?. நீங்கள் தைரியம் இருந்தால் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் விஜய் அல்லது அவர்களின் பேச்சாளர்களிடம் கேட்க வேண்டும். எங்களிடம் ஏன் மதுரை, சென்னை என அனைத்து இடங்களிலும் நொச்சி நொச்சி என இதே கேள்விகளை கேட்கிறீர்கள். சொல்ல வேண்டிய எனது கருத்துக்களை சொல்லிவிட்டேன். சம்பந்தப்பட்ட மனிதர்கள் கட்சியினரிடம் கேட்க வேண்டும்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உங்களுக்கு ஏன் இத்தனை பதற்றம்? கள்ளக்குறிச்சி, வேங்கைவயல், திருவண்ணாமலைக்கு செல்லாத நீங்கள் கரூருக்கு மட்டும் சென்றது ஏன்? கள்ளக்குறிச்சியில், திமுக சாராய வியாபாரிகள் விற்ற கள்ளச்சாராயத்தால் 66 உயிர்கள் பறிபோஅந்தே. அவர்கள் குடும்பத்தினரை சந்திக்க சென்றீர்களா? கொடுந்துயரத்துக்கு ஆளான வேங்கை மாக்களைச் சென்று சந்தித்தீர்களா? தென் மாவட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் அல்லல்பட்டபோது, இந்திக் கூட்டணி கூட்டம்தான் முக்கியம் என டெல்லிக்கு போனது ஏன்? உங்களுக்கு பாஜகவை விமர்சிக்கவோம், கேள்வி கேட்கவோ என்ன தகுதி இருக்கிறது?


